சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை தெற்கு தெருவை சேர்ந்த சேர்ந்த கெண்டியார் - ராஜேஷ்வரி தம்பதியின் மகன் செல்வகுமார்(31). இவரது மனைவி சீதாலட்சுமி(21). இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. செல்வகுமார் கொத்தனார் வேலை செய்து வந்தார். சீதாலட்சுமி நகையை அடகு வைத்து விருதுநகரில் தனியாக வீடு எடுத்து குடியேறினர்.
இதற்கு சீதாலட்சுமியை அவரது மாமியார் ராஜேஷ்வரி கண்டித்துள்ளார். சீதாலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றார். அவரை சமாதானம் செய்து செல்வகுமார் வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி சீதாலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சீதாலட்சுமி தற்கொலைக்கு தூண்டியதாக செல்வகுமாரை விருதுநகர் மேற்கு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு ராஜேஷ்வரி சேர்க்கப்பட்டார். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் செல்வகுமார், அவரது தாய் ராஜேஷ்வரி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.