சிவகாசி: மணல் அள்ளியவர்களை சுற்றிய வளையத்த சப்-கலெக்டர்...

76பார்த்தது
சிவகாசி அருகே அதிகாலையில் மண் அள்ளியவர்களை சுற்றி வளைத்து பிடித்த பெண் சப்-கலெக்டர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவுக்கு உட் பட்ட பல பகுதியில் அனுமதி யின்றி மண் அள்ளுவதாக சமூக ஆர்வலர்கவதாக இருந்து சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரனுக்குதொடர்ந்து புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து சப்-கலெக்டரின் உத்தரவின் பேரில் மண்
கடத்துபவர்களை பிடிக்க வரு வாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் இரவு நேரங்களில்
சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது மாரனேரி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட புலிப்பாறைப்பட்டி கொங்கள்குளம் ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான கண்மாய் பகுதியில் சிலர் அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக அதிகாலை 2 மணிக்கு சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து
சென்றார். அப்போது குருமூர்த்தி (39) என்பவர் தலைமையில் 3 பேர் மணல் அள்ளும் எந்திரத்தை
பயன்படுத்தி சட்ட விரோதமாக கிராவல் மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். சப்- கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன் சம்பல இடத்துக்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் தப்பி
ஓடினர். மேலும் மண் அள்ளும் எந்திரத்தில் அமர்ந்து இருந்த குருமூர்த்தி மட்டும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அவரை பிடித்து மாரனேரி போலீசார் அவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி