சிவகாசி - Sivakasi

சிவகாசி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியான எரிச்சநத்தம், நடையனேரி ஆகிய கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக இருப்பதாக M. புதுப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவல் அடிப்படையில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் போலீஸார் எரிச்சநத்தம், நடையனேரி ஆகிய பகுதிகளில் செயல்படும் பேருந்து நிறுத்தம், பள்ளி அருகே வாகன தணிக்கை செய்யும் போது, எரிச்சநத்தம் - நடையனேரி செல்லும் சாலையிலுள்ள பள்ளியின் முன்பாக இருவர் சந்தேகம் படி நின்று கொண்டிருந்தனர். மேலும் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் பேண்ட் பையில் மறைத்து வைத்திருந்த 100 கிராம் கஞ்சா போதை பொருளை கைப்பற்றி, அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிவகாசியை சேர்ந்த ராஜபாண்டி மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிய வந்தன. பின்னர் அவர்கள் இருவரும் மீது M. புதுப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Oct 09, 2024, 14:10 IST/விருதுநகர்
விருதுநகர்

விருதுநகர்: காபி வித் கலெக்டர்; மாணவர்களை ஊக்கப்படுத்திய ஆட்சியர்

Oct 09, 2024, 14:10 IST
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று (அக்.,9) 107-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.