தமிழகத்தில் 2025 ஜூலை 24-ல் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. திமுக கூட்டணியில் 4 பேர், அதிமுக சார்பில் 1 பேர் உறுதியாக எம்பியாக முடியும். கடந்த மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு திமுக கூட்டணியில் ஓர் இடம் உறுதியாகியுள்ளது. மதிமுகவைப் பொறுத்தவரை இந்த முறை எந்த ஒப்பந்தமும் திமுகவுடன் போடவில்லை. திமுகவில் இந்த ஒற்றை சீட்டுக்கு கடும் போட்டி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.