ம.பி: மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஐதராபாத்தின் நாச்சரம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் வழிபாடு செய்தபின்னர் மினி பஸ்ஸில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தவறான பாதையில் வந்த லாரி மீது மினி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.