சாம்சங் நிறுவனம் தனது Galaxy F06 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் பிப்.12-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. Galaxy F05 மாடலை 4G நெட்வொர்க் உடன் அறிமுகம் செய்திருந்த சாம்சங், Galaxy F06 மாடலை 5G நெட்வொர்க் ஆதரவைக் கொண்டு அறிமுகம் செய்யவுள்ளது. மற்ற F-சீரிஸ் மாடல்களைப் போலவே, Galaxy F06-ம் Flipkart ஆன்லைன் சந்தையில் கிடைக்கும். Samsung Galaxy F06 போன் இந்தியாவின் மலிவான 5G போன்களில் ஒன்றாகவும், இதன் விலை ரூ.10,000-க்கும் குறைவாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.