முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பஞ்சமி நில பட்டாவை ரத்து செய்ய மாநில பட்டியலின ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கு மட்டுமே சொந்தமான பஞ்சமி நிலத்தை வேறு சமூக மக்கள் பயன்படுத்த முடியாது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் வாங்கியுள்ளதாக பட்டியலின ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஓபிஎஸ்-க்கு முறையற்ற வகையில் நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.