சென்னை மாநகராட்சி மூலம் ரூ.1.61 கோடி மதிப்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்துவைத்தார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், மரப்பாதையின் வழியே கடல் அருகே சென்று அலையை ரசித்த மாற்றுத்திறனாளிகளின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்ந்தோம். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும் என துணை முதலமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.