சிவகாசி: போனஸ் உயர்வு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்...

55பார்த்தது
சிவகாசியில் தீப்பெட்டி பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தினர்
(சிஐடியு) பட்டாசு தொழிலாளர்களுக்கு பட்டாசு தொழிற்சாலை நிறுவனங்கள் இந்த ஆண்டுக்கான தீபாவளிக்கு 50 சதவீத போனஸ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் அருகே தீப்பெட்டி பட்டாசு தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் ( சி ஐ டி யு) மாவட்ட தலைவர் தேவா தலைமையில், பட்டாசு தொழிலாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக வழங்காத போனசை உயர்த்தி வழங்க கோரியும், இந்த ஆண்டுக்கான 2024 தீபாவளி போனஸ் 20% கருணைத்தொகை 30 சதவீதம் என 50 சதவீதம் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும் தொழிற்சாலை ஆய்வகத் துறையை கண்டித்து கண்டன முழக்கங்களையும் கோஷங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் சிஐடியு தொழிற்சங்கத்தின் கோரிக்கை மனுவை தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் ராஜ்குமார் அலுவலகத்தில் இல்லாததால் தொழிற்சங்க நிர்வாகிகள் தரையில் அமர்ந்து நீண்ட நேரமாக காத்திருந்தனர். அதன் பின்னர் அலுவலகத்திற்கு வந்த அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதன் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி