நாகேஷ் கட்டிய தியேட்டருக்கு அருகில் பள்ளி இருந்ததால் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கவில்லை. இதை முதல்வராக இருந்த எம்ஜிஆரிடம் நாகேஷ் கூற, MGR பள்ளி நிர்வாகத்தை அழைத்து நுழைவு வாயிலை பின்புறத்தில் பயன்படுத்தினால், பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு வராது. தியேட்டரும் திறக்க முடியும் என்றார். இதன் பின்னர் தியேட்டருக்கு அனுமதி கிடைத்தது. நாகேஷ் தியேட்டரை MGR திறந்து வைத்தார். முன்பாக நாகேஷுக்கும், எம்ஜிஆருக்கும் பூசல்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.