ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. பழமைவாத குழுவினர் பெரும்பான்மையாக நாடாளுமன்றத்தில் உள்ளதால், இந்த சட்ட திருத்தம் எளிதில் நிறைவேறும் என சொல்லப்படுகிறது. பெண்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இந்த சட்டம் இருப்பதால் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 46 மில்லியன் மக்கள் ஈராக்கில் வசிக்கின்றனர்.