தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் இருந்து நிஜாமாபாத் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தனது உடைமையை ஓட்டுனரின் இருக்கைக்கு பின்புறம் வைத்திருந்துள்ளார். அப்போது பேருந்து ஓட்டுநர் நைசாக அந்த பயணியின் உடைமையில் இருந்து தங்க நகைகளை திருடியுள்ளார். இது அனைத்தையும் பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில் ஓட்டுனர் பணியைவிட்டு நீக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.