தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த வீரபத்ரம் என்ற நபர் தனது காதலி சுவாதி என்பவரை 20 துண்டுகளாக வெட்டி கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், வேறு ஒரு தம்பதிக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி 16 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால் அந்த தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். இதனால் ஏற்பட்ட தகராறின்போது வீரபத்ரம், சுவாதியை 20 துண்டுகளாக வெட்டி கொன்று தோட்டத்தில் புதைத்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.