பூசாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ. ராஜா உட்பட 6 பேரை விடுதலை செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் பூசாரி நாகமுத்து என்பவர் தனது மரணத்திற்கு ராஜா உள்ளிட்ட சிலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த 2012-ல் தற்கொலை செய்தார். இவ்வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.