சிவகாசி: பிறந்த நாள் கொண்டாட்டம்....

54பார்த்தது
சிவகாசி: பிறந்த நாள் கொண்டாட்டம்....
சிவகாசியில் ஜி. கே. வாசன் பிறந்தநாள் விழா. தங்கத்தேர் இழுத்த பள்ளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில்ஜி. கே. வாசன் பிறந்தநாள் விழாவையொட்டி சிவகாசி மாரியம்மன் கோவிலில் பள்ளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி. கே. வாசனின் 59 வது பிறந்தநாள் விழா சிவகாசியில் நேற்று கொண்டாடப்பட்டது. விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவரும் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ராஜபாண்டியன் தலைமையில் சிவகாசி மாரியம்மன் கோவிலில் மாலை தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் ஜி. கே. வாசன் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் 700 பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட துணைத்தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான சேகர், மாநில இளைஞரணி இணை செயலாளர் ராஜன், விருதுநகர் நகர தலைவர் கண்ணன், வட்டார தலைவர்கள் முத்துசாமி, ஆர். ஆர். நகர் முருகன், மகளிர் அணி மாவட்ட தலைவர் சாந்தி மற்றும் கட்சியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you