சிவகாசி: புதிய சாலைக்கு பூமி பூஜை;. எம்.எல்.ஏ பங்கேற்பு

52பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி இரட்டை பாலம் விலக்கிலிருந்து விளாம்பட்டி விலக்குவரை செல்லும் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சாலை அமைத்த சில ஆண்டுகளிலேயே பல இடங்களில் சேதமடைந்து, அவ்வப்போது கிராவல் மண் அடித்தும், ஒட்டு போடும் பணியும் நடந்தது.

பெரியகுளம் கண்மாய் கரையை ஒட்டி சாலை அமைந்துள்ளதால் எப்போதும் தண்ணீர் ஓட்டத்தினால் எத்தனை முறை சீரமைத்தாலும் சாலை தாங்காமல் அடிக்கடி சேதம் அடைந்து சாலையில் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் சாலை பல இடங்களில் சிதைந்து உள்ளது.

தற்போது மோசமான நிலையில் போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தபட்ட சாலையை ஆய்வு செய்த சிவகாசி எம்.எல்.ஏ அசோகன் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி நிதி பெற்றுள்ளார்.

இந்த நிதியை கொண்டு அந்த பகுதியில் உள்ள சுமார் 1.4 கிலோ மீட்டர் தூர சாலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் அசோகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது புதிய சாலைதயாராக இருக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி