இளம் பருவத்தினர் மற்றும் வயதானவர்களுக்கு வரக்கூடியது டைப் 2 நீரிழிவு நோயாகும். கணையத்தில் இன்சுலினை சுரக்க கூடிய பீட்டா செல்கள் சரியாக வேலை செய்யாமலோ அல்லது குறைவாகவோ இருக்கும். இவர்களுக்கு இன்சுலின் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சர்க்கரை அளவை குறைக்கும் மாத்திரைகள் போதுமானது. அப்படியும் சர்க்கரை அளவு குறையவில்லை என்றால் இன்சுலின் தேவைப்படும். வாழ்க்கை முறை மாற்றம், உணவுக் கட்டுப்பாடு மூலம் டைப் 2 நீரிழிவை கட்டுக்குள் கொண்டு வரலாம்.