சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளர்கள் ஏற்றி வந்த வேன் மோதி சிறப்பு சார்பு ஆய்வாளர் படுகாயம். போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம். சிவகாசி கிழக்கு போலீஸ் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர்க பணியாற்றி வருபவர் கனகராஜ், இவர் நேற்று மாலை வழக்கம் போல் சிவகாசி வேலாயுதம் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பட்டாசு ஆலைக்கு சொந்தமான வாகனம் சிறப்பு சார்பு ஆய்வாளர் கனகராஜ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கால் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.