தமிழ்ப் புத்தாண்டையொட்டி சர்ச்சை சாமியார் நித்யானந்தா நேரலையில் தோன்ற உள்ளார். இது தொடர்பாக நித்யானந்தா பக்தர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் பதிவில், புத்தாண்டையொட்டி பகவான் ஜி நித்யானந்தா பரமசிவம், இன்று இரவு 7 மணி அளவில் ஆங்கிலத்திலும், நாளை இரவு 8 மணி அளவில் தமிழிலும் நேரலையில் தோன்றி பேசுயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா இறந்து விட்டதாக தகவல் பரவியதில் இருந்து அவர் படு ஆக்டிவாக உள்ளார்.