மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 14) முதல் வங்கக்கடலில் 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும், மீன் வரத்து குறைந்து காணப்படும் என்பதால் மீன் விலை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.