அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்கள்.

80பார்த்தது
சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் குட்கா புகையிலை போதை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு. மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் 4 மாதங்களுக்கு பின் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகர மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். அதன் பின்னர் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தீண்டாமை உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு சாலை பணிகளை சரியாக மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டினர். தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை முறையாக முடிப்பது கிடையாது என புகார் தெரிவித்தனர். மேலும் பணிகள் மேற்கொண்டாலும் முறையாக பதில் அளிக்காமல் சென்று விடுகின்றனர். இதற்கு பதில் அளித்து பேசிய மாநகராட்சி மேயர் இது சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.
இக்கூட்டத்தில் மொத்தமாக கூட்டத்தில் 86 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி