கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஹோட்டலின் விளம்பரத்திற்காக, அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டது நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஐம்பதாயிரம் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த கோவை மற்றும் கேரளா மாநில இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் கடைக்கு வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.