மாதுளை சாறு உடலுக்கு நன்மைகளை கொடுக்கிறது. அதே நேரம் இதை குடிப்பதைத் தவிர்க்க வேண்டிய சிலர் உள்ளனர். மாதுளை சாறு இரத்த அழுத்தத்தை குறைக்கும், இது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால், மாதுளை சாறு அதிகம் குடிக்கக்கூடாது. சிலருக்கு மாதுளை அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.