கோவையில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் தன் மகனின் மருத்துவ செலவுக்காக தந்தை கலந்துகொண்டு கண்ணீருடன் போட்டிப்போட்டு பிரியாணி சாப்பிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் கலந்துக் கொண்ட நபர் கூறும்போது, “என்னுடைய 15 வயது மகன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனை பள்ளியில் சேர்க்க ரூ.19,000 பணம் கேட்கிறார்கள். அதனால் தான் போட்டியில் கலந்துக் கொள்கிறேன்.” என்றார்.