திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி சென்னை மைலாப்பூரில், ஆக.27ஆம் தேதி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, மாநில அரசியலுக்குத் திரும்புவது மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி குறித்து மாணவர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று பதிலளித்தார்.