கழிப்பறையை பயண்பாட்டுக்கு கொண்டுவர பெண்கள் கோரிக்கை

1071பார்த்தது
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் இருக்கன்குடி சாலையில் 

பூட்டியிருக்கும் கழிப்பிடத்தை பயண்பாட்டுக்கு கொண்டுவர பெண்கள் கோரிக்கை

சாத்தூர் இருக்கன்குடி சாலை செல்லையாரம்மன்கோவில்  தெருவில் இருக்கும் குடியிருப்புகளில் போதியளவு கழிப்பிட வசதிகள் இல்லாததால் அருகே இருக்கும் காட்டுப்பகுதியை இயற்கை உபாதையை கழிக்க பயண்படுத்தி வந்தனர். கழிப்பாறை வசதி கேட்டு அப்பகுதியினரின் கோரிக்கை  வைத்தனர். கோரிக்கையை ஏற்று செல்லையாரமன் கோவில் அருகே 2021-22 ஆண்டு  15 வது நிதிக் குழுத்   திட்டத்தில்  பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை பயண்பாட்டுக்கு வராமல் பூட்டியே உள்ளதால் பெண்கள் அருகே உள்ள காட்டுப்பகுதியை இயற்கை உபாதையை கழிக்க பயண்படுத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் கழிப்பறையை பயண்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி