அரசுப் பஸ்களில் போலீஸ் இலவச பயணம் செய்வது தொடர்பாக டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. பாேலீஸார் பணிபுரியும் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மாநகர, நகர பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்கான அட்டையை காண்பிக்கும் போலீஸாரை அனுமதிக்க வேண்டும். அட்டையை காட்டவில்லையேல் அபராதம் விதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.