அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் FIR கசிந்த விவகாரம் பூகம்பத்தை கிளப்பியது. இந்நிலையில், “IPC-ல் இருந்து BNS சட்டத்திற்கு தரவுகளை மாற்றுவதில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR வெளியே கசிந்திருக்கலாம்” என தேசிய தகவலியல் மையம் (NIC) விளக்கமளித்துள்ளது. FIR கசிந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனை கூறியது குறிப்பிடத்தக்கது.