உ.பி: அலிகார் ரயில் நிலையத்தில் ராணுவ வீரர் ரயிலுக்கு இடையே சிக்கி உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக்கு பீகாரில் உள்ள வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த RAF உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிந்தா ராய் காமாக்யா எக்ஸ்பிரஸில் ஏறும் போது தவறி விழுந்துள்ளார். ரயில் மற்றும் நடைமேடைக்கு இடையே சிக்கி நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பிந்தா ராய் படுகாயமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.