நெஞ்சு வலிப்பதாகக் கூறி கும்பகோணம் மேயர் தரையில் புரண்டு கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் மாநகராட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் மேயர் சரவணன், திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி இடையே ஏற்பட்ட காரசார விவாதம், மோதலில் முடிந்தது. இந்நிலையில், காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. என்று கதறிய மேயர் சரவணன், நெஞ்சு வலிப்பதாக தரையில் புரண்டு கூச்சலிட்டார். இதையடுத்து, திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தியும் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.