சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதன் மூலம் தக்காளி காய்ச்சலை தடுக்கலாம். குழந்தைகளின் டயப்பர்களை மாற்றியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கழிவறைக்கு சென்ற பின் கைகளை கிருமிநாசினியால் கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.