பொருளாதாரம், சுற்றுச்சூழல் தான் இன்றைய உலகில் மிக முக்கியம்

58பார்த்தது
பொருளாதாரம், சுற்றுச்சூழல் தான் இன்றைய உலகில் மிக முக்கியம்
அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் இந்த நான்கும் தான் இன்றைய உலகில் மிக முக்கியம்
மாவட்ட ஆட்சியர் பேச்சு

விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் தனியார் கல்லூரியில் நேற்று மாவட்ட நிர்வகாம் மற்றும் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் சங்க இலக்கிய கருத்தரங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன்,
தலைமையில் நடைபெற்றது.

இன்றைய சூழலில் மாணவர்களுக்கு, குறிப்பாக ஆய்வு மாணவர்களுக்கு சங்க இலக்கியம் குறித்தும், திருக்குறள் குறித்தும் இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி, அதன் மூலமாக இந்த இரண்டு இலக்கிய செல்வங்கள் தமிழ் சமூகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் இலக்கியங்களாக எப்படி இருக்கின்றன என்பது குறித்து எடுத்துச் சொல்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
இன்று இருக்கக்கூடிய நிகழ்கால வாழ்வியலில் அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் இந்த நான்கும் தான் இன்றைய உலகில் மிக முக்கியமான புவி அரசியலை தீர்மானிக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி