சாத்துார் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் ஒருவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே உள்ள பழைய அரசு மருத்துவமனை அருகே சம்சுதீன் என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த பெட்டிக்கடையில் சாத்தூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவர் சட்ட விரோதமாக நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக சாத்துார் நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. மேலும் தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும் சோதனையில் சாகுல் ஹமீது என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நம்பர் லாட்டரி மற்றும் வெளி மாநில லாட்டரிகள் விற்பனைக்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரொக்க பணம் 2000/-த்தையும் கைப்பற்றி சாத்துார் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.