சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 2 பேர் காயம்

2615பார்த்தது
சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 2 பேர் காயம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்தவர் பரணி (19), அவர் நண்பர் கருத்தப்பாண்டி (20), இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்தூர் அருகே இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சாத்தூர் இருக்கன்குடி சாலை நத்தத்துபட்டி ரவுன்டான அருகே சென்றபோது முன்னால் சென்ற டாட்டா சுமோ காரின் டயர் வெடித்து நிலை தடுமாறிய இருசக்கர வாகனத்தில் மோதியதில் பரணி , கருத்தப்பாண்டி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி