ம.பி: உஜ்ஜைன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் கோயிலில் உணவு எந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று டிச.21 காலை கோயிலின் உணவுக்கூடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ரஜ்னி காத்ரி (30) என்ற பெண்ணின் துப்பட்டா உருளைக்கிழங்கு உரிக்கும் எந்திரத்தில் சிக்கி, அவரது கழுத்தை நெரித்துள்ளது. இதையடுத்து, மயக்கமடைந்த ரஜ்னி காத்ரியை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.