கட்ட அகழாய்வில் அகெட் கண்டெடுப்பு

51பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 20 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,600-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது தோண்டப்பட்ட குழியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் பணியின் போது அகெட் எனப்படும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி 3-ம் கட்ட அகழ்வாய்வில் நமது முன்னோர்கள் தொழிற்கூடம் நடத்தி, வாழ்ந்ததற்கு சான்றாக அகழாய்வில் அதிகமாக சங்கு வளையல்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் அகெட் எனப்படும் விலை மதிப்புமிக்க கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி