அருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நகர செயலாளர் சோலை சேதுபதி ஏற்பாட்டில் 36 வார்டுகளிலும் அதிமுக கட்சி கொடி ஏற்றி ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் 36 வார்டுகளிலும் அதிமுக கட்சிக்கொடி ஏற்றப்பட்டு ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுக நகர செயலாளர் சோலை சேதுபதி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுகவினர் அருப்புக்கோட்டை நகரில் உள்ள 36 வார்டுகளிலும் அதிமுக கட்சி கொடி ஏற்றினர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு தீப தூபம் காண்பித்து வழிபட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஏழை எளிய பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதோடு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நகர அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.