சாத்துார் அருகே சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது. 26 மதுபாட்டில்கள் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்துள்ள வெம்பக்கோட்டை பகுதியில் வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செண்பகவேலன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு பெட்டிக்கடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து சந்தேகத்தின் பேரில் அந்தக் கடையில் சோதனை நடத்தினார். சோதனையில் அந்தக் கடையில் அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. உடனடியாக விற்பனைக்கு வைத்திருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வெம்பக்கோட்டையை சேர்ந்த செல்வந்திரன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.