விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் 42வது வணிகர் தின மாநில மாநாடு குறித்து விளக்க கூட்டம் மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த மாவட்ட பொதுக்குழு நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது GST வரி விதிப்பு சட்டமுறைகளை மத்திய அரசு விரைவாக எளிமைப்படுத்த வேண்டும், வியாபாரிகளுக்கு விதிக்கும் சிறுசிறு வரிகளையும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
மாநில அரசு விதிக்கும் பல்வேறு வரிகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மாவட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. மேலும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்ரமராஜா 42வது மாநில வணிகர் சங்க மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அதேபோல மாநாட்டில் கலந்துகொள்ள மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.