*சாத்தூர் அருகே ஏழாயிரபண்ணை பகுதியில் வானில் வட்டவடிவில் ஆன மேகமூட்டத்தால் பொதுமக்கள் அச்சம்*
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையில் வானத்தில் காணப்பட்ட வட்ட வடிவிலான மேகமூட்டத்தால் மக்கள் ஆச்சரியமடைந்தனர். வானில் வெண்மை நிறப்பாறை போன்று உருவத்தில் காணப்பட்ட மேகமூட்டத்தால் மக்கள் சற்று நேரம் பீதியடைந்தனர் மேகமூட்டம் வேகமாக செல்வது போன்று காணப்பட்டதால் தரையில் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சமார் 3மணி நேரத்திற்க்கு மேலாக வானில் தெரிந்ததை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இந்த பகுதியில் பரவி வருகிறது.