விருதுநகர்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

59பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 120 பயனாளி களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். மேலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய பின் நிகழ்ச்சியில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே. கே எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் தமிழகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவது பெண்களுக்கான ஆட்சி என்றார்.

மேலும் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் தமிழகத்தில் செயல் படுத்தப்பட்டு வரும் வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வாங்காமல் விடுபட்டுப் போன பெண்களுக்கு என தனியாக முகாம் விரைவில் நடத்தப்படும் எனவும் அந்த முகாமில் பெண்கள் கலந்து கொண்டு விண்ணப்பம் செய்பவர்களின் மணுக்களை பரிசீலனை செய்து அவர்களுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வில்லை என குற்றம் சாட்டிய வருவாய் துறை அமைச்சர் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை முறையாக செயல்படுகிறோம் என்றார். முதல்வர் மருந்தகம் தொடங்கியவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி