சாத்தூர் அருகே பட்டாசு தயாரித்த 2 பேர் கைது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிராம், ராமமூர்த்தி, வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்பின் நகரம், பனையடிப்பட்டி, கிருஷ்ணாபுரம், கோமாளிபட்டி, வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு, கருந்திரி தயாரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள அன்பின் நகரம் காட்டுப்பகுதியில் தகரசெட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அன்பின் நகரம் எஸ்.பி.எம். தெருவைச் சேர்ந்த இயேசுகனி (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 20 கிலோ கருந்திரிகளை பறிமுதல் செய்தனர். அதேபோல வெம்பக்கோட்டையில் காட்டுப்பகுதியில் தகரசெட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்த முத்துமாரியப்பன் (40) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30 கிலோ சோல்சா வெடிகளை பறிமுதல் செய்தனர்