விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் காலகட்டத்தில்தான். பேரூராட்சிகளுக்கு அதிகமான நிதிகளை ஒதுக்கி சாலை, குடிநீர், தெரு விளக்கு, அம்ருத் திட்டத்தில் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுமே அனைத்து பேரூராட்சிகளுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் என்பது ஒரு காலத்தில் ஆழ்குழாய் போட்டு குடிநீர் வழங்குவதை மேற்கொண்டது. அதற்குப் பிறகு உள்ளூரில் உள்ள தண்ணீர் குறைந்துவிட்ட காரணத்தினால் ஆறுகளில் கிணறு வெட்டி கிணறுகளின் மூலமாக கூட்டுக் குடிநீர் திட்டத்தை வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்கினோம்.