விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகவூரில் உள்ள கோயில் முன்பாக நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வந்தன. மேலும் தகவல் அடிப்படையில் தளவாய்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரியா தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
மேற்படி ஆய்வில் முகவூரை சேர்ந்த துரைச்சாமி என்பவரது மகன் சிவசெல்வம் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.