இராஜை: மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்குது, முன்னாள் அமைச்சர்..

63பார்த்தது
இராஜபாளையத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழக சார்பாக கட்சி உறுப்பினர் அட்டை வழங்கு நிகழ்ச்சி, மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்குது என முன்னாள் அமைச்சர்
கே. டி. ராஜேந்திரபாலாஜி விமர்சனம்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக சார்பாக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கே. டி. இராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். பின்னர் மேடை பேசிய அவர்: -திமுக ஆட்சிக்கு வர வேண்டுமென போராடி வாக்களித்த திமுகவினரே திமுக ஆட்சி எப்போது முடியும் என காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.
மக்கள் பிரச்சனைகளை முடிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு போராட வேண்டும். வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி கோட்டைக்கு போகிறார். ஸ்டாலின் வீட்டுக்கு போகிறார், அதற்காக நாம் பக்குவமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய அவர்,
மக்களை பாதிக்காத வகையில் ஆட்சி தந்தது அதிமுக. காலத்தை கடத்தும் ஆட்சி கொடுத்துக் கொண்டிருப்பது திமுக. விலைவாசி ராக்கெட் வேகத்தில் கூடி, மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்குது. என்றார். மேலும் நடைப்பெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி