விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரம் காவல் சரக எல்லைக்குட்பட்ட முகவூர் காமராஜர் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக தளவாய்புரம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீஸார் சோதனை செய்தனர். மேலும் சோதனையில் அங்கு செட்டியார்பட்டி பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.