ரூ.2.2 கோடி வரி செலுத்துமாறு நோட்டீஸ்.. காவலாளி அதிர்ச்சி

80பார்த்தது
ரூ.2.2 கோடி வரி செலுத்துமாறு நோட்டீஸ்.. காவலாளி அதிர்ச்சி
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சிங். இவர் மாதம் ரூ.5,000 ஊதியம் பெற்றுக்கொண்டு காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரூ.2.2 கோடி செலுத்துமாறு நோட்டீஸ் வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், வருமான வரி செலுத்தும் அளவிற்கு தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இவரது பேன் கார்ட் மூலம் மோசடி நடந்துள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி