சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி தீயாக பரவியது. இந்நிலையில், CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர், "எம்.எஸ்.தோனி இன்னும் வலிமையாக சென்று கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் தோனியிடம் அவருடைய எதிர்காலம் குறித்து கேட்பதில்லை" என்று பதிலளித்துள்ளார்.