புதிய வருவாய் கிராமங்கள் பொதுமக்களுடன் கருத்து கேட்பு

82பார்த்தது
புதிய வருவாய் கிராமங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுடன் கருத்து கேட்பு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது*

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி முதல்நிலை ஊராட்சியை பிரித்து பாளையம்பட்டி கிழக்கு மற்றும் பாளையம்பட்டி மேற்கு என புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுடன் கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 3 வருவாய் கிராமங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும், மூன்று விஏஓக்கள் நியமனம் செய்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் எனவும், மேலும் அதேபோல எந்த காரணம் கொண்டும் பாளையம்பட்டி ஊராட்சி அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது எனவும், கிழக்கு மேற்கு என பிரிப்பதற்கு பதிலாக வடக்கு தெற்கு என பிரிக்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கினர். மேலும் பொதுமக்களின் கருத்துக்கள் மனுக்கள் அனைத்தும் அரசுக்கு தெரிவிக்கப்படும் எனவும் அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு, வட்டாட்சியர் செந்தில்வேல் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி