மிதமான மழையால் சில்லென்ற சூழல்

60பார்த்தது
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ‌ இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்று மே 15 நாளை முதலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் வேளையில் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் மிதமான சாரல் மழை காரணமாக சில்லென்ற வானிலை நிலவுகிறது. ‌ இதனால் அருப்புக்கோட்டை நகரம் குளிர்ச்சியான சூழல் நிறைந்து காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி